அஜீத்- ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதல்..!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விஜய் ரசிகர்கள் 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்களை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகரான எட்வின் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த போஸ்ட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அஜித் ரசிகரான ராஜேஷ் என்பவர் ஆபாசமாக கமெண்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தந்தை மற்றும் நண்பர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில் 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.







