--- --:--:-- --

ஐஸ்வர்யாராய்க்கு என்னை விட 2 இன்ச் கம்மி..!

13

கரகாட்டக்காரன் திரைப்பட கோவைசரலா பாணியில் சென்னை சேத்துப்பட்டில் நடந்த வானம் கொட்டட்டும் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.

 

இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பரதநாட்டிய கதாபாத்திரத்தில் நடித்து அவரை அழவைத்ததாக தெரிவித்த ராதிகா தொடர்ந்து அவரது படங்களில் கதாநாயகியாக நடிக்க கூப்பிடவும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன்னைவிட இரண்டு இன்ச் கம்மியாக இருந்ததால் அவரை கதாநாயகியாக விட்டதாகவும் கூறி கலகலப்பு ஊட்டினார்.

மேடையில் இளைய நாயகர்களை சின்ன புள்ளைங்க என்று பேசிய ராதிகாவிடம், அதான் வயசாயிடுச்சுல்ல தாராளமா சொல்லு என்று கூறி சரத்குமார் தனது பங்கிற்கு கலகலப்பு ஊட்டினார். ராதிகாவின் நகைச்சுவையால் அரங்கில் இருந்த இயக்குனர் மணிரத்தினம் நாயகன் விக்ரம் பிரபு, சாந்தனு, பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் வாய்விட்டு சிரித்தனர்.

 

உலக அழகி ஆசை உள்ளூர் கிழவி வரை வாட்டி எடுக்கும் போது நம்ம ஊரு கோடிஸ்வரி க்கு இல்லாமல் போகுமா என்பதே கமெண்ட் ஆக இருந்தது.

Leave a Reply

Right Menu Icon