92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைக்கும் மகன்!
தூத்துக்குடியில் 92 வயதான மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைதுசெய்யப்பட்டனர். கொட்ஸ் நகரை சேர்ந்த நிக்கோலஸ் இன் பராமரிப்பில் தாயின் சகோதரியான 92 வயதான மூதாட்டி இருந்தார்.
அவரை சரியாக பராமரிக்காத துடன் இரக்கமில்லாமல் கழிவறையில் தங்கவைக்கப்பட்டு, இரவில் குளிரில் நடுங்கியவாறு இருந்தார். இதை அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூகநல துறையினரின் நடவடிக்கையால் மூதாட்டி மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

சமூகநலத்துறை அளித்த புகாரின் பெயரில் மூதாட்டியை சரியாக பராமரிக்காத நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






