தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4.30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனை நடத்துகின்றனர். இதற்கு முன் கடந்த மாதம் நடந்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டு முழு விவரங்களுடன் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை வியூகம் குறித்து திமுக வரும் 20 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.






