--- --:--:-- --

விருதுநகரில் வேட்புமனு தாக்கல் – தி.மு.க, அ.தி.மு.க மோதல்

2

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேமுதிக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று, விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன், அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் காரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

 

 

அப்போது, வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் 100 மீட்டர் எல்லைக்கும் அப்பாலேயே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது, அமைச்சரின் கார் மட்டும் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டது என்று அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பாக மாறியது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Leave a Reply

Right Menu Icon