--- --:--:-- --

வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும்..!

10

வேளாண் சீர்திருத்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வேளாண் சீர் திருத்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

விவசாயிகளின் விளைபொருள் பொருள் வர்த்தக மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் நகல்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

 

இந்த நிலையில் வேளாண் சீர் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது விவசாயிகளுக்கும் விவசாய துறையினருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

விவசாயிகளை குழப்புவதில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் விளை பொருட்களை விற்க புதிய பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். விவசாயிகளை இடைத்தரகர்களிடம் இருந்து விடுவிக்க முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon