அகோரியை திருமணம் செய்து கொண்ட அகோரி..!
திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் பிணத்தின் மீது அமர்ந்து வினோத பூஜைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தும் அகோரி தனது சிஷ்யையை திருமணம் புரிந்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காசி சென்று பயிற்சி பெற்றவர் உய்யங்கொண்டான் ஆற்றின் கரையோரம் அகோர காளி கோவிலை கட்டி பூஜை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யையின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு அகோரி மணிகண்டன் தனது தாயாரின் சடலத்தின் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து பூஜை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவருடன் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளாக அகோரியாக பயிற்சி பெற்றுள்ளார்.
இதனால் அந்த அகோரிக்கும், சிஷ்யைக்கும் திருமணம் நடைபெற்றது. காளி கோவிலில் மேளம் அடித்து,கோஷம் முழங்க இரண்டு அகோரிகளும் திருமணம் செய்து கொண்டனர்.






