தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் அனுமதி..!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





