--- --:--:-- --

பிப்ரவரி 14ஆம் தேதியன்று பாய் ஃப்ரெண்ட் உடன் வந்தால் மட்டுமே காலேஜுக்குள் அனுமதி..!

13

பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும் ஒரு வாரத்திற்கு முன்னரே ரோஸ் டே, ப்ரொபோஸ் டே என்று ஏராளமான டேட்களை கொண்டாடுவர் . காதலர் தினத்திற்கு இன்னும் ஓரிரு வாரங்களில் உடல் எடையை குறைத்த வேலன்டைன் டே குறித்த ஒரு விசித்திரமான கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஆக்ராவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் லெட்டர் பேடில் எழுதப்பட்ட கடிதத்தில் பிப்ரவரி 14 இல் காதலர் தினத்திற்கு குறைந்தது ஒரு பாய் பிரண்டு உங்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும்.

 

கல்லூரியில் தனியாக வரும் பெண்ணிற்கு அனுமதி கிடையாது. அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் . இப்படிக்கு கல்லூரியின் பேராசிரியர் ஆஷிஷ் ஷர்மா என்று கையொப்பம் இடப்பட்டு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பார்த்து உற்சாகம் அடைந்த மாணவ மாணவிகள் தங்களுக்கான பாய்பிரண்டை தேர்ந்தெடுக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

 

ஆனால் இந்த லெட்டரை பற்றி தகவல் தெரிந்தவுடன் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சியடைந்து இது போலியான செய்தி என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon