பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள ஆதிபுரூஸ் திரைப்படம்..!
பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள ஆதிபுரூஸ் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகுபலி படங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த சகோ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க திட்டமிட்டு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ராதே, தீபிகா படுகோனே உடன் இணையும் இரண்டு படங்களில் அறிவிப்புகள் வெளியான நிலையில் தற்போது ஆதிபுரூஸ் படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
இந்திய புராணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கும் இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதிபுரூஸ் திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.







