பாலியல் தொல்லை புகாரில் நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு!
வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பானுப்பிரியாவின் வீட்டில் ஆந்திர மாநிலம் கோதாவரி சேர்ந்த 15 வயது சிறுமி பணியாற்றி வந்தார். அவருக்கு பானுப்பிரியாவின் சகோதரன் கோபாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆந்திராவில் புகார் அளிக்கப்பட்டது.
அதேசமயம் வீட்டில் இருந்த நகை, பணம், கேமரா ஆகியவற்றை சிறுமி திருடி விட்டதாக பானுப்ரியா புகார் அளித்திருந்தார். அதன் விளைவாக சிறுமியும் அவரது தாயும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சிறுமியின் தாய் ஆந்திராவில் அளித்த புகார் தற்போது சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடிகை பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் மீது பாண்டிபஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




