கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்ட ட்விட்டர் பதிவு..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேரிட்ட விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து அண்மையில் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம் விபத்தில் சிக்கியதில் 18 பேர் பலியாகினர். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் சூர்யா பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமாக பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் மக்களுக்கு தமது வணக்கத்தையும் விமானிகளுக்கு தனது மரியாதையும் தெரிவித்துக் கொள்வதாக சூர்யா தெரிவித்துள்ளார்.







