--- --:--:-- --

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் ஆஸ்கர் தகுதி போட்டிப் பட்டியலில் தேர்வு..!

7

டிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்கு தகுதி பட்டியல் இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் விரைவில் நடைபெறவுள்ள 94வது ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதிப் பட்டியலில் ஒன்றாக ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்தது நினைவுகூறத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon