கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..!
கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறிய சிலிண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கபெருமாள்கோவில் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதனால் லாரியில் கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் சாலைகள் விழுந்தது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பத்திரமாக அவற்றை அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





