மு.க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவிப்பு..!
தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி முன்னெடுக்க தேர்தலில் வெற்றி அடைந்து மக்களின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனக் கூறினார்.
அதேபோல சுவாசிப்பதற்கு உயிர் காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல் படும் இந்த பேரிடர் காலத்தில் நீங்கள் முதல்வராக வந்திருப்பது நம்பிக்கை அளிப்பதாகவும் தெரிவித்தார். தங்களது ஆட்சிக் காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடையும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.






