கிர்கிஸ்தானில் சிக்கிய மாணவர்களை மீட்டுவர உதவிய நடிகர் சோனு..!
கிர்கிஸ்தானில் சிக்கித்தவித்த 135 இந்திய மாணவர்கள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மூலம் தாயகம் திரும்பினார். கிர்கிஸ்தானில் படித்தவரும் சுமார் 1500 மாணவர்களை 9 விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த முயற்சியில் ஸ்பைஸ்ஜெட் உடன் பாலிவுட் நடிகர் சோனு சூட் கைகோர்த்து இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள மிஸ்கே நகரில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் வாரணாசி வந்தடைந்தது .
இதன் மூலம் 135 இந்திய மாணவர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியா வர உதவிய நடிகர் சோனுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக சொந்த ஊர் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள சுமார் 15,000 பேரை இந்தி அழைத்துவர 90 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






