நடிகர் ரஜினிகாந்த்க்கு கொரொனா தொற்று என வதந்தி..!
நடிகர் ரஜினிகாந்துக்கு கொரொனா என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் என பலருக்கும் கொரொனா தொற்று உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்திற்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது அவருடைய செய்தி தொடர்பாளர் டுவிட்டர் மூலமாக அதற்கு பதில் அளித்துள்ளார்.
தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் இதுவரை அவருக்கு தொற்று எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் அவர் ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் அதேபோல நடிகை ஐஸ்வர்யாராய் என பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை இருப்பதா அவர்கள் தாங்களாகவே டுவிட்டர் மூலமாக இந்த தகவல்களை தெரிவித்து இருந்தனர்.
எனவே ரஜினிகாந்துக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறிவந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.






