நடிகர் அஜீத் சைக்கிளில் சென்ற புகைப்படம் வைரல்..!
நடிகர் அஜித்குமார் சாலைகளில் சைக்கிள் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பைக் ரேஸ், கார் ரேஸ் புகைப்படம் எடுத்தல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இன்னும் பல விஷயங்களை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி குறித்த அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் சாலை உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்ற அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.






