--- --:--:-- --

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 முதியவர்களுக்கு அதிரடி தீர்ப்பு..!

1

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னையில் மூன்றாம் வகுப்பு சிறுமியை அவரது தாத்தா முறை உறவு கொண்ட இரண்டு பேர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது.

 

சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

அதில் இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகமில்லாமல் உறுதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Right Menu Icon