திருப்பதியில் மரம் சரிந்து விழுந்து விபத்து..!
திருப்பதியில் உள்ள கோவிலில் தற்பொழுது வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திருப்பதியில் மழை பெய்தது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான அரசமரம் இரண்டாக பிளந்து பயங்கர சப்தத்துடன் முறிந்து விழுந்தது.
இதை கவனித்த பக்தர்களில் பலர் ஓடி விட்ட நிலையில் பக்தர்கள் பலர் ஒடிந்து விழுந்த மரத்தின் கீழ் சிக்கிக்கொண்டனர். அதில் டாக்டர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





