பிரியாணிக்காக அமமுக தொண்டர்கள்.. ஆத்திரத்தில் தட்டை வீசிய சப்ளையர்..!
சேலத்தில் நடைபெற்ற அமமுக கூட்டத்தில் வெஜிடபிள் பிரியாணி வாங்க தொண்டர்கள் முட்டி மோதிய நிலையில் உணவு விநியோகித்தவர் கோபத்தில் தட்டை பிடுங்கி வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.
சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற பொழுது மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி வழங்கப்பட்டது.
அப்பொழுது தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதி உணவு வாங்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த சப்ளையர் கோபமாக தட்டை வீசிய காட்சி வெளியாகி உள்ளது.






