--- --:--:-- --

ஆதவ் அர்ஜுனாவுடைய தனி வாகனத்தில் விஜய்யின் இல்லத்திற்கு வருகை..!

8

செங்கோட்டையனின் ராஜினாமா தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க மதியம் 1:30 மணி முதல் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

 

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர்.

 

இந்தச் சூழலில்தான், செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்க வந்தார். அவர் ஆதவ் அர்ஜுனாவுடைய தனி வாகனத்தில் விஜய்யின் இல்லத்திற்கு வருகை தந்ததைச் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

Right Menu Icon