ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம் பெண்..டெலிவரி செய்ய வந்து அத்துமீறிய ஊழியர்..!
சென்னையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த மளிகை பொருட்களை டெலிவரி செய்த பொழுது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை துறைப்பாக்கத்தை சேர்ந்த இளம் பேன் ஆன்லைனில் இணையதளத்தில் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். கடந்த 5ம் தேதி அந்த பொருட்களை ஊழியர் ஒருவர் டெலிவரி செய்துள்ளார். அப்பொழுது வீட்டில் இளம் பெண் தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்ட ஊழியர் அவரிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது.
ந்த ஊழியர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இதன் பெயரில் தகவல்களை சேகரித்த துரைப்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அது ஜெயபால் என்பது தெரிய வந்தது.





