--- --:--:-- --

காவல்துறைக்கு பயந்து ஓடியதில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு..!

10

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது காவல்துறைக்கு பயந்து ஓடியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அரசுப் பேருந்து டிரைவர் புலிகேசி வீடு செல்வதற்காக அருகே நின்ற பொழுது லட்சுமணன் என்பவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்களை சிகிச்சைக்காக அரசு பேருந்தில் அழைத்துச் சென்ற பொழுது போக்கு வரத்து நெரிசல் காரணமாக அந்த பேருந்து போலீஸ் நிலையம் முன்பு நின்றது.

 

இதனை கண்ட லட்சுமணன் பயந்து போய்க் கீழே இறங்கி அருகேயுள்ள கடைக்குள் போய் பதுங்கிக் கொண்டார். ஆனால் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய சிகிச்சையை பெறாததால் அவர் நள்ளிரவில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

Right Menu Icon