டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது இளம்பெண் பாலியல் புகார்..!
அண்மையில் தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர்.
2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த பாடலில் வரும் நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி.இந்நிலையில், 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் புகார் கொடுத்துள்ளதார்.
அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர்.





