தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய் வெட்ட தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வேளாண் தொழிலாளி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். உறவினர்கள் வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.





