கொசுவிற்கு போட்ட புகை மூட்டத்தால் பெண் ஒருவர் உயிரிழப்பு..!
சென்னை பல்லாவரம் அருகே கொசுவிற்கு போட்ட போது புகை மூட்டத்தால் பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் பம்மல் புனே நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இன்று காலை புகை வெளியே வர தொடங்கியுள்ளது.
இதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 பேர் மயக்க நிலையில் இருந்துள்ளனர் . அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது புஷ்ப லட்சுமி என்ற பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூச்சு இருப்பதாக கூறி மேல் மருத்துவத்திற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.





