--- --:--:-- --

பேருந்து ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பெண் உயிரிழப்பு..!

6

ஞ்சையில் கல்லூரி பேருந்தில் ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய பெண் ஒருவர் கணவர் கண் முன்னே பலியானார். மனைவியின் சடலத்தை கண்டு கணவர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சை அருகே உள்ள நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கமலநாதன்.

 

இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமியை சிகிச்சைக்காக கமலநாதன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

 

மோட்டார் சைக்கிளில் தஞ்சை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி ஜெயலட்சுமி கீழே உள்ளவரின் தலை மீது கல்லூரி பேருந்து ஏறி இறங்கியது.

 

இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே மனைவி இறந்ததை பார்த்து கமலநாதன் கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

Right Menu Icon