கோவையில் இரண்டு வயது குழந்தை பாலியல் துன்புறுத்தி கொலை..!
கோவையில் இரண்டு வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் கீழ மேடு பூலாங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரகுநாதன்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி கோவையை சேர்ந்த 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்று பின்னர் தலைமறைவான ரகுநாதன் மீது கொலை மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரகுநாதனுக்கு குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் காரியத்தை செய்ததற்காக மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





