இரண்டு வயது சிறுவன் வாய்க்காலில் மூழ்கி உயிரிழப்பு..!
சீர்காழி அருகே ஆதார் அட்டைக்கு தாயுடன் சென்று இரண்டு வயது சிறுவன் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் செங்கமேடு பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கத்தின் மனைவி ரஞ்சிதா தனது குழந்தை அமரனுக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வாய்க்கால் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு சென்றார் ரஞ்சிதா.
ஆவணங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தபொழுது விளையாடிக் கொண்டிருந்த அவன் எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஒருமணி நேரத்திற்குப் பிறகு அனுமந்தபுரம் பகுதியிலிருந்து சிறுவனின் உடலை மீட்டனர்.






