தீராத வயிற்று வலியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
டயாலிசிஸ் மற்றும் தீராத வயிற்று வலி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் கௌரி சங்கர். 35 வயதானவர் கல்லீரல் மற்றும் வயிற்று வலி காரணமாக திங்கள்கிழமை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சங்கர் திடீரென கடும் வயிற்றுவலி ஏற்பட்டு வலியால் துடித்ததில் மருத்துவமனையின் முதல் தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் உடன் இருந்து கவனித்து வந்து அவரது தாய் விமலா வெளியே சென்ற நேரத்தில் அரங்கேறி இருந்த சம்பவத்தால் மகனை பறிகொடுத்து கதறி அழுதது அனைவரையும் கலங்கடித்த நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





