--- --:--:-- --

களக்காட்டில் ஜாலியாக சாலையில் நடமாடும் புலி

14

களக்காட்டில் புலிகள் சரணாலயத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் களக்காடு பனக்குடி சாலையில் இரவு நேரத்தில் புலி ஒன்று சுற்றித் திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 

இதனால் களக்காடு பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர் இரவு நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon