--- --:--:-- --

ரயிலில் திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்..!

3

னைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்து குடிபோதையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு பிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய நபர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

 

இதனையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்த குருவாயூர் ரயிலில் மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினார்.

 

பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. ரயில் எழும்பூர் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு விசாரணை நடத்திய போலீசார் செல்போனில் முகவரியை வைத்து சதீஷ் பாபு என்பவரை கைது செய்தனர்.

 

அவர் தனது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் போதை தலைக்கேறியதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணை தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து காவல் நிலைய பிணையில் அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon