வீசிய பலத்த காற்று.. மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பலத்த மழையின் பொழுது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நிதி உதவியை அறிவித்துள்ளார்.
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அப்போது பசுபதி கோயிலில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்து மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியே வந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதில் பத்தாம் வகுப்பு மாணவி சுஷ்மிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரம் விழுந்து பள்ளி மாணவி சுஷ்மிதா இறந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்த மாணவி ராஜேஸ்வரிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.





