--- --:--:-- --

புதரில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ..!

10

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கோணிப்பை வீசப்பட்டிருந்தது.

 

இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் கும்மிடிபூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த கோணிப்பை குறித்து பார்த்த பொழுது அதில் மண்டை ஓடு, கை, கால் எலும்பு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பிசியோதெரபி படித்த பொழுது வாங்கி வைத்திருந்த மண்டை ஓடு மற்றும் எலும்புகளை அவரது தாயார் புதரில் வீசியது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon