--- --:--:-- --

இதயம் செயலிழந்த கர்ப்பிணி 80 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அதிசயம்..!

9

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாட்கள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தாயும் சேயையும் காப்பாற்றியுள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவகாணபள்ளி கிராமத்தை சேர்ந்த 26 வயது பெண் 36 வார காலம் கர்ப்பத்துடன் எந்த ஒரு அசைவும் இன்றி இருதயம் செயலிழப்புடன் கர்ப்ப கால வலிப்பு நோய், உயர் இரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்சனைகளுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை 9ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

தொடர்ந்து செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் 35 நாட்களுக்கு அந்த பெண்ணிற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

 

இதன்பின் அவர் உடல் நலம் தேறி பிரசவித்தார். இதை தொடர்ந்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சைக்கு பின் அந்த பெண் பூரண நலம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Right Menu Icon