காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!
பொள்ளாச்சி அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் கோமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த மணியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





