--- --:--:-- --

3 நாட்களாக வீட்டில் அடைத்து பிளஸ் ஒன் மாணவி பாலியல் பலாத்காரம்..!

13

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவியை மூன்று நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் வடசேரி மேல கருங்குடி பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜ்.

 

பள்ளி மாணவிகளிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்ததாகவும் அவமானம் கருதி பெற்றோர் புகார் அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு வசந்தராஜ் போக்சோவில் கைதானார்.

 

இந்த நிலையில் வசந்த ராஜா, பூத்தேரி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை தனது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வசந்தராஜ் மீது இரண்டாவது முறையாக போக்சோவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon