பருவமெய்திய இஸ்லாமிய பெண் திருமணம் செய்து கொள்ள தகுதியுடையவர்..!
பருவமெய்திய இஸ்லாமிய பெண் தான் விரும்பியவரை மணம் புரிய தகுதியுடையவர் ஆகிறார் என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மதத்தலைவர் சட்டங்கள் குறித்த புத்தகத்தை மேற்கோள்காட்டி இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்த ஒரு புதுமண தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது 36 வயது இஸ்லாமிய ஆண் ஒருவர் 17 வயதில் இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் அதற்கு இரு குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் 18 வயது எட்டாமல் இருந்தாலும் பருவம் எய்தினால் இஸ்லாமிய தனிநபர் சட்டப்படி திருமண தகுதி வந்து விடுவதாகவும் எனவே தங்கள் திருமணத்தை அங்கீகரித்து பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.







