--- --:--:-- --

2 குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய்..!

10

மதுரையில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுக்கு தீவைத்துக் கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலவாசல் பகுதியை சேர்ந்த தமிழ்ச் செல்வியும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

அதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண் தனது இரண்டு பெண் குழந்தைகள் மீது தீ வைத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தமிழ்ச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon