பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை பணத்திற்காக செய்த கொடுமை..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே ஜீவா நகரை சேர்ந்த முனியசாமி முத்து தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் போதிய வருமானம் இன்றி தவித்து வரும் தம்பதி குழந்தையை விற்க முன் வந்தனர்.
தென்காசி மாவட்டம் பெருங்களத்தூர் ஜெயபால் என்பவரின் ஆலோசனையின் படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தம்பிராஜ் என்பவரது மனைவி 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு தங்களது குழந்தையை விற்பனை செய்துள்ளனர்.
பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தம்பி உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






