--- --:--:-- --
1

கொரொனா வைரஸ் பரவுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்களை பாதுகாக்கவும் கைதட்டல்கள் உதவாது என ராகுல்காந்தி சாடியுள்ளார். கொரொனா வைரசால் இந்திய பொருளாதாரத்திற்கு பலத்த அடி விழுந்து இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கால்நடைத்துறை சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தினக்கூலி தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவற்றை சீர் செய்ய வெறும் கை தட்டல்கள் மட்டும் போதாது எனக் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி நேரடி பண பரிமாற்றங்கள், வரிச் சலுகைகள் மற்றும் கடனை திருப்பி செலுத்த வகையில் சலுகை அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரம், நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

கொரொனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நாடுகளும் ஒதுக்கியுள்ள நிவாரண தொகை குறித்த தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். பல்வேறு நாடுகள் அறிவித்துள்ள வரிச் சலுகைகளை பட்டியலிட்டுள்ளார். இதுபோல இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon