முதியவர் கட்டையால் தாக்கி கொலை ஒருவர் கைது..!
ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உணவை நாய் சாப்பிட்டதால் ஏற்பட்ட தகராறில் முதியவரை தாக்கி கொலை செய்ததாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிற்பாடு சாத்தான் கிராமத்தை சேர்ந்த சண்முகம் தனது தந்தை முனுசாமிக்காக உணவகத்தில் வாங்கி வந்த உணவை பக்கத்து வீட்டுக்காரர் சிவா வளர்த்து வந்த நாய் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்து சண்முகம் நாயை தாக்கியதாக கூறப்படுகிறது. தகராறு ஏற்பட்ட நிலையில் முனுசாமியை சமாதானம் செய்ய முயன்றார். அதனால் சிவா கட்டையால் தாக்கியதில் முதியவர் முனுசாமி மருத்துவமனையில் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.






