கழிப்பறையில் புகுந்த ராஜ நாகம்..!
கழிவறையை பயன்படுத்திய பிறகு அதிலிருந்து பாம்பு வந்தால், அந்த நொடி எப்படி இருக்கும்? அதிலும் 5 அடி ராஜ நாகம் வந்தால் கதிகலங்கிவிடும். இது உண்மையிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த பாம்பு, கழிவறைக்கு செல்லும் பைப் வழியாக வந்திருக்கலாம் என்கின்றனர்.
இதுகுறித்த வீடியோ வைரலாகவே, ‘இனி பாத்ரூம் போகும்போதெல்லாம் பக்கு பக்குனு இருக்குமே’ என்று நெட்டிசன்கள் பதறுகின்றனர்.






