பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விரட்டி விரட்டி பெண் காவலருக்கு கத்திக்குத்து..!
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகராறில் ஊர் காவல் படை பெண் காவலரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பணம் கொடுக்கல், வாங்கல் தவிர அதில் காவலர் அஞ்சலி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சதீஷ்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





