மாற்றுத்திறனாளி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்..!
சென்னை விமான நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் காயமடைந்தார். கொரியர் நிறுவனத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளியான யாரா என்பவர் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவரது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதிவிட்டு நடைபாதை மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் யாரா படுகாயமடைந்தார்.
நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறை விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகிறது.






