கனிமொழி தலைமையில் MPக்கள் குழு ரஷ்யா பயணம்..!
திமுக MP கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கனிமொழி தலைமையில் ஒரு குழு இன்று ரஷ்யாவுக்கு செல்கிறது. மாஸ்கோவில் விளக்கம் அளித்ததும், அங்கிருந்து புறப்பட்டு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியாவுக்கு இக்குழு செல்கிறது.





