இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை: தவிக்கும் மக்கள்
தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் தினசரி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
அதிலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நிலையில், சாதி சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்றுகளை பெற முடியாமல் அவதியடைவதாக மாணவர்கள், பெற்றோர் புலம்புகின்றனர். ‘பேக் எண்ட்’ சர்வரில் நிலவும் பிரச்னையே இதற்கு காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.





