--- --:--:-- --

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது..!

9

ங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon