--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு பொது முடக்கம்…!

17.1

கொரொனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இன்றி முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்து பொது முடக்கத்தை நீட்டித்து வருகிறது.

 

எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு பொதுமக்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற கடைகள் திறக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியில் நடமாட கூடாது என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon